பொலன்னறுவை, வெலிகந்த, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தப்பிச்சென்றவர்களை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில்வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுவினருக்கு இடையில் நேற்றையதினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போதே ஒரு குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறியுள்ளார்.

இதேவேளை, பதற்றநிலை மேலும் தொடர்வதாகவும் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்