கஸ்பேவ சித்தமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையின் போது அங்கிருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் இருந்து ஆறு கிலோ, நூற்று எழுபத்தாறு கிராம் போதைப்பொருள் மற்றும் பத்தொன்பது MM தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்த இடம் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக தங்கல்ல பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.



அதன்படி, உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது வீட்டில் இருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வீட்டில் இருந்து 06 கிலோ 176 கிராம் ஹெரோயின் மற்றும் 19 9mm பிஸ்டல் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதேவேளை, அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் 40 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (07) அம்பலாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பிரிவு, அம்பலாந்தோட்டை மற்றும் கெஸ்பேவ பொலிஸ் நிலையங்களின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6