ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனூடாக 6 மாதங்களுக்காக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடித்துக்கொள்ள முடியுமென திணைக்களம் கூறியுள்ளது.
இதனிடையே, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை, வௌிநாடுகளுக்கு செல்வோருக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments