Ticker

6/recent/ticker-posts

ரஷ்ய - உக்ரைனை இணைத்த இந்தியா.. தர்மசாலாவில் நடந்த டும் டும்..!

 


ஹிமாச்சல் பிரதேசத்தின் தர்மசாலாவில் உக்ரைனில் செட்டில் ஆன ரஷ்ய நாட்டை சேர்ந்த செர்ஜி நோவிகோவ், தனது உக்ரேனிய காதலியான எலோனா பிரமோகாவை இந்து பராம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்ட உள்ளூர்வாசிகள், அனைத்து சடங்குகளையும் செய்து, பாரம்பரிய உள்ளூர் நாட்டுப்புற இசைக்கு நடனமாடி, புதுமணத் தம்பதிகளை தங்கள் சொந்த நாட்டை போல உணரவைத்தனர். விருந்தினர்களுக்கு காங்கிரி தாம் எனப்படும் அறுசுவை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.



நோவிகோவும், பிரமோகாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், இந்தாண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். தர்மசாலாவில் திருமணம் செய்து கொள்வதென்றும் முடிவு செய்துள்ளனர். 

இருவரும் கடந்த ஒரு வருடமாக தர்மசாலாவிற்கு அருகில் உள்ள தரம்கோட்டில் வசித்து வந்தனர் என்று திவ்யா ஆசிரமம் கரோட்டாவின் பண்டிட் சந்தீப் சர்மா தெரிவித்தார். "எங்கள் பண்டிட் ராமன் ஷர்மா அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார், மேலும் சனாதன தர்மத்தின் மரபுகளின்படி திருமணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களிடம் கூறினார். 

திருமண சடங்குகளை வினோத் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர், பிரமோகாவின் 'கன்யாடன்' உட்பட செய்தனர். தரம்கோட்டில் வசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இதில் கலந்து கொண்டனர். இந்த ஜோடி பாரம்பரிய இந்திய திருமண ஆடைகளை அணிந்திருந்தது மற்றும் பாராயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. அதற்கு பண்டிட் ராமன் சர்மா ஒவ்வொரு மந்திரத்தின் அர்த்தத்தையும் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் விளக்கினார்.

Post a Comment

0 Comments