டன் பிரியசாத்தின் சகோதரர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகுடவத்த மேம்பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இக்கொலையை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீதொட்டமுல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் எனவும் அவர் டான் பிரியசாத்தின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையாளியின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என குடும்பத்தினர் தெரிவித்த போதும் பெற்றோல் வரிசையின் கைகலப்பாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்
0 Comments