காலி முகத்திடலை அண்மித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவி விலக வலியுறுத்தி  கோட்டா கோ கம எனும் பெயரில்  ஏர்படுத்தப்ப்ட்டுள்ள போராட்ட களத்தை அகற்ற பொலிஸார் முன்வைத்திருந்த வழக்கை விசேட கோரிக்கையை முன்வைப்பதற்காக மீள விசாரணைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசேட வழக்குகள் தவிர்ந்த ஏனைய வழக்குகள் தற்போதைய சூழலில், நீதிச் சேவை ஆணைக் குழுவின் சுற்று நிருபத்துக்கமைய ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய விசேட காரணத்துக்காக இம்மனு எதிர்வரும் 8 ஆம்  திகதி வெள்ளிக் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிய முடிகிறது.