#திரைமறைவில்

#தீவைப்பது_யாரோ??

#பழிசுமப்பது_யாரோ?

இராஜினாமா வை இழுத்தடிப்பதற்கு காரணம், நாட்டுக்கு தீயை வைத்துவிட்டு, பழியை JVP இன் மீது இட்டுச்செல்லவே.. ஏனெனில் சஜித் ஆட்சிசெய்தாலும், அரசியலுக்கு மீண்டு வரலாம், அநுர வந்தால் அவர்களது அரசியல் வாழ்க்கை முற்றுப்பெரும்.. அதற்காகத்தான், தற்போது மக்கள் எவ்வளவுதான் வெறுத்து திட்டித்தீர்த்தாலும், இன்னும் இராஜினாமா செய்யாமல் கதிரையை கட்டியணைத்துக்கொண்டு இருக்கின்றனர்.. எது எப்படியோ, பிரதமர் பதவியை பெற்ற உடனே கோட்டாகோகம ஆர்ப்பாட்டத்தை கைவிடாதீர்கள், எனது ஆதரவு உண்டு என கூறிய பிரதமர், ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டிய தருணம் வந்தும் பதில் ஜனாதிபதியாக வந்து ஜனநாயகம் பற்றி  பேசுவது நகைப்புக்குரியதே..

முழு நாட்டையும் ஏமாற்றிக்கொண்டு, வன்முறையை எங்கே வம்பிழுக்கலாம், எப்படி போராட்டத்தை குழப்பலாம் என திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்துபவர்கள் நல்லவர்கள் என்று வாதிடவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..

அமைதியை நிலைநாட்டத்தான் பதில் ஜனாதிபதியாக வந்தாராம் என மிஸ்டர் டீல்"கூறுகிறார்.

ஹாஹாஹா..

நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒரே ஒரு கடிதத்தை அனுப்பினால் நாடு முழு அளவில் அமைதியாகும்,என தெரியாமலா இதை கூறுகிறார்..

எல்லாம் சரிதான், ஆனால் இதற்குள் சதிப்பொறியாக சிக்கித்தவிக்கும் அநுரவை நினைத்தால்தான் கவலையாக உள்ளது..

ஏனெனில் எமது நாட்டு கலாச்சாரம் அப்படி..

"தவறு செய்தவனையே நோகுவார்கள்,

தவறுக்கு பின்னாலுள்ளவர்களையும்,

சதிகளையும் சற்றும் சிந்திக்கவும் மாட்டார்கள்.!!


எப்படியோ அநுரவுக்கு இது"கடைசிப்போர்.. இந்த போரில் கடைசிவரை அமைதியை தக்க வைக்க கடுமையாக போரிட வேண்டிவரும்.. அதில் வெல்வாரா தோற்பாரா என அவரது காய்நகர்த்தலிலே உண்டு!!  

Copy - paste