22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்எதிர்வரும் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


இதனால், நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், சட்டமூலத்தின் முதல் வாசிப்பின் பின்னர் ஒரு வாரத்திற்குப் பின்னர் விவாதம் நடத்த முடியும் என குறிப்பிட்டார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது. அதன்பின், கடந்த ஜூன் 24ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதேவேளை, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6