எரிபொருள் நெருக்கடி காரணமாக, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறை, போஷாக்கான உணவு வகைகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் உள்ளிட்டவை காரணமாக நாட்டில் சுமார் 60 இலட்சம் பேர் மிகவும் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.
குழந்தைகளின் ஆரோக்கியம், கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் போஷாக்கு, தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம் பாரியளவில் மோசமடைந்துள்ளதாகவும், தற்போது நாட்டில் சுமார் 15,000 இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Comments