இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது யாழ். மாநகர சபைக்கு சென்ற இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஜப்பான் தூதுவர் ஆராய்ந்தார்.
பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவுகின்ற பொழுது, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற முன் நிபந்தனையை விதிக்குமாறு ஜப்பானிய தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்ததாக மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்ற பட்சத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான களம் திறக்கப்படும் என சுட்டிக்காட்டியதாகவும் மணிவண்ணன் கூறினார்.
0 Comments