எதிர்வரும் 24 நாட்களின் பின்னரே பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலே டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 11,000 மெட்ரிக் டன் டீசலே கையிருப்பில் உள்ளது.
அத்துடன் 5,000 மெட்ரிக் டன்னுக்கும் குறைவான பெற்றோலே கையிருப்பில் உள்ளது.
இவ்வாறான பின்னணியில், மீண்டும் 38,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 11 முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எம் சமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 35,300 மெற்றிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஜூலை 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments