அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள் அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருக்கு, கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவவினால் கையொப்பமிட்டு விடுக்கப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில்,
2026 ஆம் ஆண்டில் அனைத்து அரசு பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2026 டிசெம்பர் மாதம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவடையும்.
2027 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை 2027 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
அதற்கமைய, இப்பாடசாலை தவணை முடிவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளையும் உரிய கால அட்டவணைகளின்படி எவ்வித தடையுமின்றி நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கிறேன் என்றும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments