அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதற்கிணங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்குமான விசேட ஆணைக்குழுவும் அமைக்கப்பட உள்ளதாக, தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச துறையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் சம்பள முரண்பாடுகள் மற்றும் தொழில்முறை சார்ந்த பிரச்சினைகளுக்கு, இந்த ஆணைக்குழுவூடாக தீர்வு காண எதிர்பார்க்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைக் களைந்து, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் பொறுப்பும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026ஆம் ஆண்டுக்கான படஜட்டில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரச ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் இந்தச் செயல்முறை தற்போது உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments