Ticker

6/recent/ticker-posts

மூதூரில் ஏழு இலட்சம் பணம் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கணவனும்மனைவியும் கைது.!!


மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆலிம் நகர் பிரதேசத்தில் கொமர்ஷல் க்ரடிட் வங்கிக்கு பக்கவாட்டில் செல்லும் வீதியில் வசிக்கும் 35 வயதுடைய கணவரும் 33 வயதுடைய மனைவியுமான வியாபாரிகள் இன்றைய தினம் (13) ஏழு இலட்சம் ரூபா பணம், ஐஸ் போதைப் பொருட்கள் மற்றும் ஒரு தொலைபேசியோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இக் கைதானது இன்றைய தினம் போதை வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர்களிடமிருந்து 3 கிராம் 200 மில்லி , 200 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதை பொருட்கள் ,ஏழு இலட்சம் பணம் மற்றும் தொலை பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாகவே இச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டு கைது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Mutur Manaseer

Post a Comment

0 Comments