Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் என்றால் பாடம் மட்டும் கற்பிப்பவரா…? இல்லை சிலர் தங்கள் உயிரையே அர்ப்பணித்து மனிதநேயத்தின் அர்த்தத்தை உலகிற்கு உணர்த்துபவர்கள்…..!!



இலங்கையின் #மஹியங்கனை பகுதியில் அமைந்துள்ள பம்பரபான_மகா_வித்தியாலயத்தில் பணியாற்றிய அன்பு ஆசிரியர் கு_ஏ_டி_குமாரசிங்க அவர்கள் பற்றிய இந்த உண்மைச் சம்பவம் இன்று பலரின் கண்களையும் நனைத்துள்ளது.

அனைவராலும் அன்புடன் “குமார சார்” என்று அழைக்கப்பட்ட இவர், பாடம் கற்பித்த ஆசிரியர் மட்டுமல்ல… மாணவர்களின் வாழ்க்கையை தன் வாழ்க்கையாக நினைத்த உன்னத மனிதர். 

அதே பாடசாலையில் கல்வி கற்ற மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் #கயான்_தில்ஷான், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்கள், “இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன… உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்தப்படாவிட்டால் உயிர் ஆபத்து” என தெரிவித்தனர். 

பணமில்லா பெற்றோரின் வேதனையை கண்ட குமார சார், அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த தீர்மானம் ஒன்றை எடுத்தார்… 

தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை மாணவனுக்கே தானமாக வழங்க முன்வந்தார்!

“உங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்” என்று பலர் தடுத்தபோதும், அவர் கூறிய வார்த்தைகள் இன்று பலரின் இதயத்தையும் உருக்குகின்றன… 

🗣️ “என்னை விட இந்தக் குழந்தைக்கு வாழ வேண்டிய காலம் அதிகம்… ஒரு ஆசிரியராக நான் அவனை இறக்க விட முடியாது…” 

சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது. மரணத்தின் விளிம்பில் இருந்த மாணவனுக்கு புதிய வாழ்க்கை கிடைத்தது. 

ஆனால்,இந்த மனிதநேயத்தின் பின்னால் வேதனையான முடிவும் இருந்தது… 

சிறுநீரக தானத்தின் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும், குமார சார் தொடர்ந்து மாணவர்களுக்கு கற்பித்தார்.

பின்னர் ஏற்பட்ட உடல்நல சிக்கல்களால், வெறும் 42 வயதிலேயே அவர் உயிரிழந்தார். 

அவரது இறுதி ஊர்வலத்தின் போது, அவர் உயிர் தந்த மாணவன் கயான், ஆசிரியரின் உடலை அணைத்துக்கொண்டு கதறி அழுத தருணம் அங்கு இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது… 


மனிதநேயம் இன்னும் இந்த உலகில் உயிருடன் இருப்பதை நிரூபித்த உன்னத ஆசிரியர்.

Post a Comment

0 Comments