Ticker

6/recent/ticker-posts

கள்ளக்காதலனால் கொலைசெய்யப்பட்ட குடும்பப் பெண். கணவனின் அதிரவைக்கும் வாக்குமூலம்


கள்ளக்காதலனால் கொலைசெய்யப்பட்ட குடும்பப் பெண். கணவனின் அதிரவைக்கும் வாக்குமூலம்

மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்திரிகா ஷியாமலி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் வரவேற்பறையில் பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

அவருக்கு அருகிலேயே கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சந்தேகநபரான துமிந்த என்பவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் இவ்வாறு கூறியிரருக்கார் ....

தனது மனைவி கொழும்பில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், அழகு நிலையத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ய, தற்போது காயமடைந்துள்ள துமிந்த என்பவருடன் தனது மனைவி டுபாய் சென்று திரும்பியுள்ளார்.

அந்த நபருக்கும் இடையில் தொழில் ரீதியான தொடர்பே தவிர வேறெதுவும் இல்லை என அவர் மறுத்துள்ளார்.

சம்பவத்தன்று கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண்ணிற்கும் சந்தேகநபருக்கும் இடையில் நிலவிய தகாத உறவு அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரதலியத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்க்கே இவ்வாறு நடந்துள்ளதா அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்த பெண்ணுக்கு தகாத உறவில் இருந்த நபருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீடித்த நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இச் சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர் தனது கழுத்தை ஆயுதத்தால் தாக்கி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். சந்தேகநபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பிபிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிபிலை வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments