உள் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போது தலைக் கவசம் அணிய வேண்டுமா?
ஆம்,
கட்டாயமாக அணிய வேண்டும்.
ஓட்டுனர் மாத்திரம் அல்ல பின் புறம் அமர்ந்து இருப்பவர் கூட அணிய வேண்டும்.
நாம் மோட்டார் சைக்கிளை செலுத்த அதில் ஏறுவது என்றாலே தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது சட்டம். இங்கு எந்த வீதி, எந்த இடம் என்ற எதுவும் எதிர் வாதமாக கொள்ளப்படாது.
இன்னுமொரு முக்கிய விடயம் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து தலைக் கவசம் அணியாமல் செல்பவருக்கும் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதுடன் நாம் பயண்படுத்தும் தலைக்கவசம் உரிய தராதரத்துடன் இல்லை என்றாலும் நமக்கு தண்டப்பணம் அறவிடலாம் அல்லது வழக்கு தாக்கல் செய்யலாம்.
இன்று வெள்ளிக்கிழமை
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தினால் குறைந்த தண்டப்பணம் ரூபா 25,000/- அத்துடன் குறித்த வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கும் ரூபா 25,000/- தண்டப்பணம் விதிக்கப்படும்.
ஆக.......
தமது பிள்ளைகளுக்கு வாகனத்தை செலுத்த கொடுக்கும் போது அவதானம் தேவை என்பதை நினைவில் வைப்போம். வீண் பிரச்சினைகளில் இருந்து தவிர்ந்து கொள்வோம்.
மு.இ. இயாஸ்தீன்
சட்டத்தரணி
WhatsApp Join உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்கள் விரல்களில்.. WhatsApp Link
0 Comments