Ticker

6/recent/ticker-posts

நீதிமன்றத்தில் மின்சாரத்தை துண்டித்து, சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை பாழாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் ; விமல் வீரவங்ச எச்சரிக்கை


நாட்டில் முன்னாள் ஜனாதிபதிகளின் கைது ஒன்று இடம்பெறுவதற்கு முன்னர் அது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்
நாளை அநுரவுக்கு இதுபோன்று நடந்தாலும் இந்த விடயத்தையே தாம் கூறப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரணிலா அநுரவா அல்லது வேறு எவருமா என்ற பிரச்சினைகள் இங்கு இல்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நீதித்துறை தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது.

நீதிமன்றங்களை இரவு நேரம் வரை திறந்து வைத்து இவ்வாறான நோக்கத்தை நிறைவேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மின்சாரத்தை துண்டித்து, சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை பாழாக்கி, நகைப்பூட்டும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments