Ticker

6/recent/ticker-posts

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

 


கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு, கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்தோரில் ஒருவர், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக இருந்த சமீர மனஹார என்பதும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments