எகிப்தின் வடக்கே #Menoufia எனும் பகுதியில் இளம் பெண்கள் பயணித்த #மைக்ரோ பஸ் ஒன்றும், டாங்கர் #லாரி ஒன்றும், நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்தவர்களில் 19 இளம் பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். #சாரதியும் உயிரிழந்தார்.
சிறிய நாட்கூலிக்காக தினமும் விவசாய #பண்ணை ஒன்றில் பணியாற்ற செல்லும் 15 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்களே வேலை முடிந்து வீடு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் #KafrAlSanabsa எனும் கிராமத்தை சேர்ந்த ஏளை இளம் பெண்கள்.
அனைவரது ஜனாஸாக்களும் (சடலங்கள்) நேற்று ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
எகிப்தை உலுக்கிய இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரிதாப அலையை ஏற்படுத்தியுள்ளது.
NOTE: காணொளியில் இருப்பது அவர்களது #முகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட Ai வீடியோ!
உண்மையான படங்கள் மற்றும் விபத்தின் பின்னரான காணொளி .
29.06.2025
0 Comments