Ticker

6/recent/ticker-posts

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த இளைஞன் கொலை செய்யப்பட்ட நிலையில் வீதியில் சடலமாக மீட்பு


இன்று காலை ஹோமாகம மாற்று வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 35 வயது நபருடையது என அடையாளம் காணப்பட்டது



படுகொலை செய்யப்பட்டவர் ஜிந்துபிடிய – ஆண்டுருப்பு வீதி பகுதியைச் சேர்ந்த பலனி சிராம் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நபர், பிரபல பாதாள உலக குற்றக் குழு தலைவர் பூக்குடு கன்னாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவில் உறுப்பினராக இருந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



மேலும், இந்த நபர் 2022ஆம் ஆண்டு விஷம் குடுத்த சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டவர் எனவும், அவருக்கு மரண அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நபர் பெண்களுடனான தொடர்புக்கு மிகவும் ஆர்வமுடையவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடலில் பெண்ணொருவரின் முடி கிடைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த இளைஞர் வேறு இடத்தில் படுகொலை செய்யப்பட்டு, பின்னர் இந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவரது மரணத்திற்கு காரணம், தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், அவரது கழுத்தில் வீக்கம் மற்றும் அதனைச் சுற்றி இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

உடல் கண்டெடுக்கப்பட்ட மாற்று வீதி இன்னும் திறக்கப்படாத பகுதியாகவும், இரவு நேரங்களில் அங்கு இருள் சூழ்ந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நுகேகொட பொலிஸ் பிரிவின் குற்றவியல் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments