👉ஈரானின் முக்கிய தளங்கள் மீது #இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடாத்தி வருகிறது.
👉இங்கே நீங்கள் காண்பது, ஈரானின் #ராணுவ (IRGC) தலைமையக கட்டடம். இஸ்ரேல் ஏவிய தற்கொலை #ட்றொன்கள் மூலம் குறித்த கட்டிடம் தகர்க்கப்பட்டுள்ளது.
👉இதேபோன்று இன்றைய தினம் #விமான நிலையம், எரிபொருள் நிலையம், அணு ஆலைகள், வதிவிட #அடுக்குமாடிகள் உள்ளிட்ட பல நிலைகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்களும், ட்றொன்களும் சுதந்திரமாக பறந்து தாக்குதல் நடாத்தி வருகின்றது.
👉இதற்கிடையே #மொஸாட்டின் ஈரானிய #தரகர்கள் மூலம் சுமார் 5 கார்களில் வெடிகுண்டு வைத்து ஈரானில் இன்று பல கட்டடங்களிடையே வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
👉இஸ்ரேலுக்கு #ஒட்டு (வேவு) பார்த்த குற்றத்தில் 2 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
👉இஸ்ரேலிலும் ஈரானுக்கு வேவு பார்த்த குற்றத்தில் 2 இஸ்ரேலியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஈரானில் இந்று இடம்பெற்ற மேற்படி தாக்குதல்கள் எவற்றையும் #ஈரான் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.
👉இதற்கான காரணம் இதை விடவும் #பிரமாண்டமான தாக்குதலை மேற்கொள்ள ஈரான் #தயாராகி வருகிறதா? அல்லது ஈரானின் முக்கிய பாதுகாப்பு தளங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் #பூமிக்கடியில் இருப்பதினால் கணக்கின்றி இருக்கிறதா எனும் சந்தேகமும் எழுகிறது.
👉ஈரானின் #முக்கிய தளங்கள் மற்றும் #ஆயுதங்கள் யாவும் பூமிக்கடியில் சுமார் 80 மீற்றர் முதல் 100 மீற்றர் ஆழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
👉இதேவேளை இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்க வேண்டாமென கடுமையான தொனியில் #ட்றம்ப் எச்சரித்துள்ளார்.
👉இன்றிரவு இஸ்ரேலுடன், அமெரிக்க போர் விமானங்களும் #இணைந்துகொள்ளும் சாத்தியங்களும் இருக்கிறது.
இந்த 👆 எச்சரிக்கைகள், தாக்குதல்களை எல்லாம் #ஈரான் கவனத்திலெடுக்குமா?
அல்லது
ஏற்கனவே #Promise பண்ணியது போன்று #TruePromise-3 ஐ முழுதாக நிறைவேற்றி முடிக்குமா என்பதனை இன்றிரவு காணலாம்.
15.06.2025
0 Comments