தெனியாய என்சல்வத்த கொஸ்குளுன தோட்டத்தின் நேற்று இரவு பெண்ணொருவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 06.45 மணியளவில் மணைவி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக கணவன் வீட்டு வாசலுக்கு அருகில் வந்து கத்தியுள்ளார்.
உடனே ஊராருக்கு சந்தேகம் ஏற்படவே கணவன் மாயமாக சென்று பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
ஊரார் உடனே 1990 அம்பியுலன்ஷ் மற்றும் தெனியாய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
குறித்தப்பெண் இறந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில் இந்த பெண் 9 மாதங்கள் கர்பிணியாக இருந்துள்ளதோடு இன்றைய தினம் (18.05.2025)
அவர் பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டு இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊரார்,மற்றும் பொலிசார் இணைத்து வயிற்றில் உள்ள குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்று காப்பாற்ற முற்பட்ட போது குழந்தையும் இறந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இந்த பெண்ணின் கணவன்தான் கொன்று தூக்கில் மாட்டிவிட்டதாக அருகில் இருந்த 7 வயதுடைய மகன் மற்றும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
தற்போது சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் பண தகராற்றின் காரணமாக ஏற்பட்டிருக்களாம் என சந்தேகிக்கின்றனர்.
குறித்த கணவன் மணைவி ஆகிய இருவரும் ஏற்கனவே திருமன முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தகது.
இவ்வாறு உயிரிழந்தவர் 25 வயதுடைய ராமசாமி இசாந்தி என்ற ஒரு பிள்ளையின் தாயாராவார்.
27 வயதுடைய அமில்காந்த குமார் என்ற குறித்த பெண்ணின் கணவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெனியாய பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
0 Comments