Ticker

6/recent/ticker-posts

மோட்டார் சைக்கிளுடன் வீதி ஓரத்தில் பாடசாலை அதிபர் சடலமாக .


 சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக கடமையாற்றிவரும், ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ரவிச்சந்திரன் பதுளை, அலுகொல்ல-கந் வீதியில் சடலமாக காணப்பட்டார் . 

கந்தேகெதரவிலிருந்து பதுளைக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து, தியனவல பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளுடன் வீதி ஓரத்தில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை பேருந்தின் ஓட்டுனர் அவதானித்துள்ளார்.

பின்னர் அந்த நேரத்தில் எதிர் திசையில் இருந்து வந்த பேருந்தை நிறுத்தியுள்ளதாகவும், பிறகு குறித்த நபர் உடனடியாக கந்தேகெதர வைத்திருக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் வைத்தியர் பரிசோதனை மேற்கொண்ட போது குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தமைக்கான காரணம் விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து என இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதாக கந்தேகெதர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீத் ரத்நாயக்க தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வடிகானுக்குள் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments