Ticker

6/recent/ticker-posts

மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தந்தை

 


கொழும்பு உடப்புவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் 63 வயதான நபரின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு 

முன்னதாக குறித்த நபர் உடல்நிலை சரியில்லாமல் உடப்புவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.


கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாப மரணம்

எனினும் மரணம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அது கொலையென தெரிய வந்துள்ளது. 

தந்தை உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நெஞ்சில் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரது தந்தை சிகிச்சை பெற வராததால் ஏற்பட்ட கோபத்தில் அவரை கத்தியால் குத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments