நீங்கள் புதிய பாஸ்போர்ட் எடுக்கத் திட்டமிடுகிறீர்களா? நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான மாற்றங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் இதோ!
முக்கிய மாற்றங்கள்:
புதிய நிறம் & தொடர்: பழைய சிவப்பு நிற ("N" Series) பாஸ்போர்ட்டுக்கு பதிலாக, இப்போது Navy Blue நிறத்தில் "P" Series பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
Middle East பாஸ்போர்ட் இல்லை: இனி "மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும்" (Middle East Only) என்ற பாஸ்போர்ட் கிடையாது. அனைவருக்கும் "All Countries" (அனைத்து நாடுகளுக்கும் செல்லக்கூடிய) பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை (படிமுறைகள்):
1️⃣ குடிவரவுத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டுடியோவில் (Authorized Studio) புகைப்படம் எடுக்க வேண்டும். அவர்கள் தரும் Photo Reference Number உள்ள ரசீதை மட்டும் கொண்டு செல்லுங்கள்.
2️⃣ தேவையான ஆவணங்கள் (Originals + Photocopies):
📌பிறப்புச் சான்றிதழ் (மூலப்பிரதி).
📌தேசிய அடையாள அட்டை (NIC).
📌பழைய பாஸ்போர்ட் (இருந்தால்).
📌ஸ்டுடியோ ரசீது.
(மொழிபெயர்ப்புச் சான்றிதழ்கள் ஏற்கப்படாது, ஒரிஜினல் பிரதிகள் அவசியம்) .
💰 கட்டண விபரங்கள் (2026):
🚀 ஒரு நாள் சேவை (Urgent Service): ரூ. 20,000
📬 சாதாரண சேவை (Normal Service): ரூ. 10,000
(16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 👶👶:)
1. தனி கடவுச்சீட்டு கட்டாயம் (Individual Passport) 👶 முன்பு போல் பெற்றோரின் பாஸ்போர்ட்டில் குழந்தைகளின் பெயரைச் சேர்க்க முடியாது. பிறந்த குழந்தை முதல் 16 வயது வரையிலான அனைவருக்கும் இப்போது தனித்தனி கடவுச்சீட்டு எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2. கைரேகை தேவையா? (Biometrics) ☝️❌ 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை (Fingerprints) வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது குழந்தை நேரில் வருவது அவசியம்.
🔹 சிறுவர்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்கள்
📌 குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் (Original)
📌 தாய் & தந்தையின் NIC (Original + Copies)
📌 இரு பெற்றோரின் ஒப்புதல் கடிதம் (Consent Letter)
📌ஸ்டுடியோ ரசீது.
📌 திருமணம் / விவாகரத்து / மரணம் / தத்தெடுப்பு இருந்தால் – சம்பந்தப்பட்ட Court Order / Certificate
✈️ பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும்போது, குழந்தைக்கு கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பிப்பது எப்படி?
1️⃣ வெளிநாட்டில் இருக்கும் பெற்றோர்: அங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் (Embassy) சென்று, சம்மதக் கடிதம் (Consent Letter) மற்றும் உங்கள் கடவுச்சீட்டு பிரதியை அதிகாரி முன்னிலையில் கையொப்பமிட்டு அத்தாட்சிப்படுத்த (Attest) வேண்டும். ⚠️ குறிப்பு: சாதாரண கடிதம் போதாது, தூதரக முத்திரை கட்டாயம்!
2️⃣ இலங்கையில் இருக்கும் பெற்றோர்: வெளிநாட்டில் இருந்து வந்த அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடிதத்தின் மூலப் பிரதியுடன், மேலே குறிப்பிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு பிள்ளையுடன் Passport Office செல்லவும்: மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் ✅ திருமணச் சான்றிதழ் (Original & Copy) எடுத்து செல்லவும்
💰 கட்டணம் (16 வயதுக்குள்)
• 3 வருட பாஸ்போர்ட்
👉 Normal – Rs. 3,000
👉 One Day – Rs. 9,000
• 10 வருட பாஸ்போர்ட் (விருப்பம்)
👉 Normal - Rs. 10,000 / One Day - Rs. 20,000
🚫 பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால்? பாஸ்போர்ட் தொலைந்தால் புதிய பாஸ்போர்ட் கட்டணத்துடன் சேர்த்து + அபராதமும் (Fine) செலுத்த வேண்டும்:
பாஸ்போர்ட் பெற்று 1 வருடத்திற்குள் தொலைந்தால்: ரூ. 20,000 அபராதம்.
1 வருடத்திற்குப் பின் தொலைந்தால்: ரூ. 15,000 அபராதம்.
📍 விண்ணப்பிக்க முடியும் இடங்கள்
• Battaramulla – Head Office
• Kandy, Matara, Vavuniya, Kurunegala, Jaffna (One Day Service கிடைக்கும்)
🕒 நேரம்: காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். சிலவேளை கூட்டம் அதிகமாக இருப்பதால் அதிகாலையிலேயே (காலை 6 மணிக்குள்) செல்வது நல்லது.
பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

0 Comments