காசா மக்கள் வசதியான நாடுகளில் குடியேற்றப்படுவர் நான் இஸ்ரேலில் அன்பு செலுத்துகிறேன் இஸ்ரேல் காசா விஜயத்துக்கும் ஏற்பாடு ஊடக சந்திப்பில் டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் மீது நான் அளவில்லாத அன்பு வைத்துள்ளேன்காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் விஜயம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன் என
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....
இஸ்ரேல் ஜனாதிபதி நெட்டன் யாஹூ உடனான நீண்ட நேரம் சந்திப்பின் இருவரும் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்
இச்சந்திப்பின் போது அவர் தொடர்ந்து உரையாற்று கையில்
காசா ஒரு அழிந்து போன பூமி காசா மரணத்தின் அடையாளம் அதனை அமெரிக்கா சுவீகரிக்கும்
அமெரிக்கப் படைகளை அங்கு அனுப்பி இடிந்து போன கட்டிடங்களை அகற்றி காசா புனர் நிர்மாணம் செய்யப்படும்
அதன் நிர்வாகத்தை அமெரிக்கா பொறுப்பேற்கும் இதனால் அண்மித்த நாடுகளுக்கும் நிம்மதி கிடைக்கும்
இதற்குப் பதிலாக 1.8 மில்லியன் சனத் தொகையை கொண்ட காசா மக்கள் வசதி அடைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளில் குடியேற்றப்படுவர் அவர்களுக்கு வசதியான வீடுகள் வாழ்வமைப்பு செய்து கொடுக்கப்படும் இந்த தீர்மானம் திடீரென எடுக்கப்பட்டது அல்ல நான் ஏற்கனவே அந்நாட்டு தலைவர்களுடன் பேசி உள்ளேன் அவர்களும் விருப்பமாக உள்ளனர் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments