Ticker

6/recent/ticker-posts

சிரியாவில் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி

சிரியாவின் வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது நேற்று (3) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்பிஜ் நகரின் புறநகரில் பெண் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே இந்த குண்டு வெடித்துள்ளது.

இதன்போது, ஒரு ஆணும் 18 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு,15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.





இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் மன்பிஜில் நடந்த ஏழாவது குண்டு வெடிப்பு இது என்று சிவில் பாதுகாப்பு துணை இயக்குநர் முனீர் முஸ்தபா கூறியுள்ளார்.

கடந்த டிசம்பரில் ரஸ்ய சார்பு ஜனாதிபதி பசார் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில் உள்ள மன்பிஜ் பிரதேசத்தில் தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments