கிழக்கு மாகாணத்தில் பாண்டிருப்பு பிரதேசத்தில் கடல் வற்றியதாகவும், சுனாமி வரப் போகிறது என்று பரப்பப்படும் தகவல் வெறும் வதந்தியாகும்.
அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் பற்றி அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களிடம் சற்றுமுன்ன தொடர்பு கொண்டு கேட்ட போது :
அப்படியான விடயம் ஒன்றும் நடக்கவில்லை. சுனாமி பற்றிய எந்த பதிவுகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த விடயம் வெறும் வதந்தியாகும்.பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பாதுகாப்பாக வீடுகளில் இருந்து கொள்ளுங்கள் என சற்றுமுன் தெரிவித்தார்.
Sulaiman Raafi
0 Comments