இ*ஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனை தா*க்குதல் நடத்திவருவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.

இதே நேரம் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தற்காத்துக் கொள்ளவும், பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தை பாதுகாக்கவும் அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் இருந்து அறிக்கை அளித்த பாலஸ்தீனிய பத்திரிகையாளர் முகமது கைரி, வானத்தில் டசன் கணக்கான ஏவுகனைகள் மேற்கு நோக்கி ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலை நோக்கிச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஈரான் இஸ்லாமிய இராணுவம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது