இந்தியாவில் டாடா குரூப் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. இவர் வயது மூப்பின் காரணமாக உடல் நலமில்லாமல் இருந்தார். அதனால் சமீபமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு காலமானார். இவரின் மறைவுக்கு தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் இரங்கள் தெரிவித்திருக்கின்றனர். பலரும் புகழும் ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம்....
டிசம்பர் 28, 1937: மும்பையில் நேவல் - சூனி டாடாவுக்கு மகனாகப் பிறந்தார்.

ரத்தன் டாடா
1955: மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியில் பள்ளிப் படிப்பை தொடங்கி, சிம்லாவில் உள்ள பிஷப் காட்டனில் படித்து முடித்தார்.
1962: நியூயார்க்கிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் (architecture) பட்டம் பெற்றார்.
1962: டாடா இண்டஸ்ட்ரீஸில் உதவியாளராக டாடா குழுமத்தில் சேர்ந்தார். டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் கம்பெனி (டாடா மோட்டார்ஸ்) ஜாம்ஷெட்பூர் ஆலையில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார்.
1969: ஆஸ்திரேலியாவில் டாடா குழுமத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றினார்.
1970: 1968-ல் டாடா கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் (TCS) தொடங்கப்பட்டது. அதில் இணைய 1970-ல் இந்தியா திரும்பினார்.
1971: National Radio and Electronics (Nelco) நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1974: டாடா சன்ஸ் குழுவில் இயக்குநராக இணைந்தார்.
ரத்தன் டாடா
1975: ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் Advanced Management Program கற்று முடித்தார்.
1981: டாடா இண்டஸ்ட்ரீஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டாடா (strategic plan) மூலோபாயத் திட்டத்தை வரைந்தது. உயர் தொழில்நுட்ப முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நிறுவனம் வடிவமைக்கபப்டுகிறது.
1986-1989: தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைவராக பணியாற்றினார்
மார்ச் 25, 1991: டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக பொறுப்பேற்றார்.
2000: பிரிட்டிஷ் பிராண்ட் டெட்லி (டீ) நிறுவனத்தை வாங்கியதன் மூலம் புதிய தொழில்துறையில் நுழைந்தார்.
2000: இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றார்
2005: பிரிட்டானிய நிறுவனமான ப்ரன்னர் மோண்ட் (Brunner Mond) நிறுவனத்தை டாடா கெமிக்கல்ஸ் கைப்பற்றியது.
2007: ஐரோப்பிய எஃகு நிறுவனமான European steel giant Corus கையகப்படுத்தியது.
2008: Jaguar Land Rover நிறுவனத்தை வாங்கியது.

ரத்தன் டாடா
2008: இந்தியாவின் மிகவும் மலிவு விலை கார் டாடா நானோ அறிமுகப்படுத்தப்பட்டது.
2008: நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
டிசம்பர் 2012: சுமார் 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2013: நீரா ராடியா ஒட்டுக்கேட்பு சம்பவம் தொடர்பான வழக்குக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது, தனியுரிமைக்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
2017: டாடா குழுமத்தின் இடைக்காலத் தலைவராக பணியாற்றினார்.

அப்துல் கலாம் - மன்மோகன் சிங்குடன் ரத்தன் டாடா
2017 முதல்: ஸ்டார்ட்அப்களில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள் என்ற கொள்கையுடன் செயல்பட்டார்.
2021: நீரா ராடியா ஒட்டுக்கேட்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ரத்தன் டாடா மற்றும் டாடா சன்ஸ் ஆகியோருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
2024: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
0 Comments