இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. 


இதற்கமைய, நாளை (03) காலை வரை ஈரானில் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை,ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் அங்கு அனாவசியமாக வெளியில் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.