கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும் சிறிலங்கா மாநாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டிருந்தன.
0 Comments