க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை சமூகவலைத்தளங்களில் இடுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டை எண் மற்றும் முழுப் பெயரையும் பகிரங்கப்படுத்துவதன் மூலம், இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் அந்தத் தகவலை எளிதாகப் பெற்று பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட முடியும்.
மாணவர்களின் வங்கிக் கணக்குகளை ஹேக்கர்கள் அணுகி நிதி மோசடியில் ஈடுபடலாம் என விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர, பிள்ளைகளின் தகவல்கள் சிறுவர்களுககு பாதிப்பை ஏற்படுத்தும் மற்ற தவறான செயல்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.
எனவே பெறுபேறு தாள்களை வெளியிடும் போது அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் விபரங்களை மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments