கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற மாநாட்டின் மீது தமது கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கும் தமது கட்சியைச் சேர்ந்த எவருக்கும் தொடர்பில்லை என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியினால் நேற்றுதேசிய நூலக ஆவணச் சேவை சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடு ஒன்றின் போது மோதல் நிலையொன்று ஏற்பட்டிருந்தது.
பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் வனாத்தமுல்ல அமைப்பாளர் மற்றும் கிருலப்பனை பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் பெல்லந்துடாவ குற்றம் சுமத்தினார்.
0 Comments