- மொஹமட் அன்ஸிர் -

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை, 23 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

இதற்கு கட்சித் தவைர் சஜித் பிரேமதா தலைமை தாங்கியுள்ளார்.

இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டுமென தமது அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளனர்.

மற்றும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையலாம், ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையக் கூடாதென்ற நிலைப்பாட்டில் நின்றுள்ளனர்.

எனினும் இதுகுறித்து எத்தகைய இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.

இணையத்திற்கு SJB யில் இருந்து கிடைத்த, மிக நம்பகரமான தகவ்லகளின்படி, ரணில் விக்கிரமசிங்க இல்லாத, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட, ஐக்கிய மக்கள் சக்தி தமது விருப்பத்தை வெளிக்காட்டும் என அறிய வருகிறது.