ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர், சஜித் பிரேமதாசா ஜனாதிபதியானால், பிரதமராக அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமாக நியமிக்கப்படுவார் என, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்க பிரதமாக நியமிக்கப்படுவரென, சில சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தொடர்பில், கருத்துக்கூறிய முஜீபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டதாவது,
முஸ்லிம் சமூகத்திடமிருந்து சஜித்திற்கு கிடைக்கவுள்ள வாக்குகளை தடுப்பதற்காக, பல கட்டுக் கதைகள் உலா வருகின்றன. அதில் ஒன்றுதான் சஜித் ஜனாதிபதியானால், சம்பிக்க ரணவக்க பிரமராக நியமிக்கப்படுவார் என்ற கட்டுக் கதையாகும்.
சம்பிக்க என்பவர், எமது கூட்டணியில் உள்ள ஒருவர். அவ்வளவுதான். அவர் ஒரு பங்காளி கட்சித் தலைவர். எமது கட்சியில் எத்தனையோ மூத்தவர்கள் உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒருவர்தான், பிரதமராக நியமிக்கப்படுவார். சம்பிக்க எமது கட்சியைச் சார்ந்தவர் அல்ல.
சஜித் பிரேமதாசா இதில் மிகவும் உறுதியாகவும், எமது கட்சி மிகவும் தெளிவாகவும் உள்ளது. ஆம், சஜித் ஜனாதிபதியாளனால் ரஞ்சித் மத்தும பண்டாரதான் பிரதமர். சம்பிக்க ரணவக்க அல்ல.
முஸ்லிம் சமூகத்திற்கு இதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
சமூக தளங்களில் வரும், ஆதாரமற்ற போலிச் செய்திகளை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்து விடக்கூடாது எனவும் அவர் மேலும் கூறினார்.
0 Comments