அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அநுரகுமார திஸாநாயக்க, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தொடர்பான அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவியேற்புக்கு வழிவகுப்பார் என்று தாம் நம்புவதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதிகார மாற்றத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எந்தவொரு பிரச்சினையையும் உருவாக்குவார் என தாம் நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments