பாதுக்க மஹிங்கல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் திடீரென தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.


வேன், கெப் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை மாநகரசபை தீயணைப்புத் துறை வந்து தீயை அணைக்க முயற்சித்த போதிலும், மூன்று வாகனங்களும் ஏற்கனவே தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்து மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியதா என்பது வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.