நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அயலவர்கள் வழங்கிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டபோது மரம் ஒன்றில் தூக்கிட்டவாறு பெண் ஒருவர் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேவாலதென்ன, கலஹகம, ஹக்கல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(நுவரெலியா நிருபர் செ.திவாகரன்)