மட்டக்களப்பு- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை (16) மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நடக்க முடியாமல் விழுந்து கிடக்கும் யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் யானையின் நிலைகண்டு பிரதேச மக்கள் துயரத்தில் உள்ளனர்.