பங்களாதேஷில் அண்மையில் மாணவர்கள் போராட்டத்தினால் அரசாங்கம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது.

அந்நாட்டு அரசாங்கம் போதிய நிதி கையிருப்பின்றி பங்களாதேஷ் முழுவதும் இருளில் மூழ்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷிற்கு மின்சாரத்தை வழங்கும் அதானி நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது.

இதேவேளை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் கடன் வசதியின் கீழ் பங்களாதேஷ் அரசாங்கம் செயற்பட்டு வந்தது.

நெருக்கடியான நிலையில் அவரமாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் கோரியுள்ளது.