இன்று(5) காலை 6.35 மணியளவில் கல்கிஸ்ஸை பீச் ரோட்டில் வீதியை கூட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவனை மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியாலி சுட்டு விட்டு மீண்டும் அவனை துரத்தி சென்று நெரிசல் மிக்க #காலி பிரதான வீதியில் வைத்து சுட்டுக்கொல்லும் CCTV காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த இளைஞன் மற்றும் பின்னணி தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.
தெஹிவளை - ஓபன் பகுதியில் இந்த இளைஞன் #நகரசபை பணியாளர்.
போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் அவரது #தாயார் தற்போது #சிறையில் உள்ளார், இறந்த இந்த இளைஞனும் 2023 ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் #கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்.
மேலும், போதைப் பொருள் கடத்தல் செய்யும் ஒருவரின் உறவினர் என்று கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
05.05.2025
0 Comments