இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்றை விடுக்கத் தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தனது ஆட்சி காலப்பகுதியில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்கள் குறித்து தெரிவிக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
குறித்த அறிவிப்பு ஒன்று எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் மைத்திரிபால சிறிசேன வெளியிடலாம் எனவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மைத்திரிக்கு தொடர்ந்து அழைப்புகளை மேற்கொண்டு “ கட்சியை ஒன்றிணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” என தெரிவித்து வருவதாக அறியக் கிடைத்துள்ளது.
0 Comments