தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் பிரதமராக ஒரு பெண்ணாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.


ஜனாதிபதி தேர்தலில் செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47 ஆம் சரத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றார்.

மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.