எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எங்கு போட்டியிடுவார் என்பது குறித்து எத்தகைய இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அக்கட்சியின் உயர் வட்டாரங்கள் இணைய்திடம் தெரிவித்தனர்.
கண்டியில் அல்லது அம்பாறையில் ஹக்கீம் போட்டியிடுவார்.
மேற்குறித்த ஒரு மாவட்டத்தில் போட்டியிட ஹக்கீம் பிடிவாதமாக உள்ளார்.
எனினும் களநிலவரங்கள் ஹக்கீமின் பிடிவாதத்தைவிட முக்கியமானவை என சுட்டிக்காட்டிய அந்த முஸ்லிம் காங்கிரஸின் உயர் வட்டாரம் அம்பாறையில் போட்டியிடுபவர்கள் குறித்த இதுவரை எத்தகைய இறுதித் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினஃ.
ஆனால் சில தர்மசங்கடங்கள் நிலவுவதை முஸ்லிம் காங்கிரஸ் உயர் வட்டாரம், இணையத்திடம் ஒப்புக் கொண்டது.
0 Comments