வாரியபொல வல்பாலுவ பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த திருடன் பிடிபட்டதாக 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சுந்தரகம, அவுலேகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் சந்தேகநபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்தவர் சந்தேகநபரின் வீட்டிற்கு வந்த போது சந்தேகநபர் வீட்டில் மறைந்திருந்து சுத்தியலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், 36 வயதுடைய சந்தேகநபர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments