நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமமதாசவின் சின்னமான ரெலிபோன் சின்னத்திற்கு போடுவதாக நினைத்து கால்குலேட்டருக்கு மக்கள் வாக்களித்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை ஜானாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.


நெட்டிசன்கள் கிண்டல்

கடந்த காலங்களில் ராஜபக்க்ஷக்களால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த இலங்கை மக்கள் , நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்க்ஷர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளனர்.



ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு யாரென்றே தெரியாத பியதாஸவுக்கு போட்ட வாக்கு அளவு கூட திகாமடுல்லவில் நாமலுக்கு கிடைக்கவில்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.