இன்று (13) காலி மாவட்டம், ரத்கம, விஜேரத்ன மாவத்தை புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 45 மற்றும் 55 வயதுடைய தொடங்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் பூஸா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ரத்கம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments