இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தான் தோற்பேன் என நன்கு அறிந்துகொண்டே ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறார் என தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்..
கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவின் 30 கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன.கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவர்களுக்கு மக்கள் ஆதரவில்லை.அவர்கள் மக்களை கூட்டங்களுக்கு ஒன்றுகூட்ட முயற்சித்தாலும் வருகிறார்கள் இல்லை. ரணில் நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னோடு இணைத்திருந்தார்.
எதிர்வரும் தினங்களில் நடைபெறவுள்ள கூட்டங்களில் அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகி, எங்களோடு பலர் இணைந்துகொள்ளவுள்ளனர். நேற்று கீதா குமாரசிங்க காலியில் நடைபெற்ற கூட்டத்தில் எங்களோடு இணைந்திருந்தார். எதிர்வரும் நாட்களில் இன்னும் பலர் எங்களோடு இணையவுள்ளனர். இனி எங்களுக்கு, எங்களது கூட்டங்களில் முன் ஆசனங்களில் அமர இடமிருக்காது. பின் ஆசனங்களில் அமர வேண்டிய நிலை ஏற்படும். ரணில் தோல்வியடையும் நிலையில் இருப்பதால், இன்னும் சில நாட்களில் அனைவரும் எங்களோடு இணைந்துகொள்ளவுள்ளனர்.
காலையில் வந்து, பார்த்தால் ரணிலின் அலுவலகத்தில் யாருமில்லை. பகல் 12 மணிக்கெல்லாம் ரணிலும் அலுவலகம் மூடப்படுகிறது. ” முடியும் ” என தேர்தல் பிரச்சாரம் செய்யும் ரணில், ” இயலாத ” என கைவிட்டு, சென்றுவிட்டார். நீங்கள் தான், எங்களை இங்கே வருமாறு கூறி, எங்களை பிரச்சனையில் தள்ளிவிட்டுள்ளீர்கள் என அவர்களது அணியினர், தங்களுக்குள் சண்டை பிடிக்கின்றார்கள். எல்லாம் முடிந்துவிட்டது என குறிப்பிட்டார்.
0 Comments